ரஜினியுடன் அதிகப் படங்களில் நடித்தவர். கமலுடனும் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் முன்னணியில் இருந்த போதே இந்திப் படவுலகில் கால்பதித்தார். பின்னர் தமிழ்ப் படங்களில் நடிக்க முடியாத அளவிற்கு பல படங்களில் நடித்து வந்தார்.
இந்திப் பட அதிபர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். 20 வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் ஸ்ரீதேவி தமிழில் களமிறங்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புதேவன் இயக்கும் படத்தில் தற்போது ஸ்ரீதேவி நடித்து வருகிறார்.
இதில் விஜய் கதாநாயகனாவும், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரண்மனை வடிவமைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்களுடன் விஜய், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துக் கொண்ட பாடல் காட்சிகளைப் படமாக்கினார்கள்.
“எப்போதும் எனக்கு கொடுத்து வரும் அன்பும் அரவணைப்பிற்கும் சென்னைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தலைமுறை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் செய்யும் வேலைகள் என்னைக் கவர்ந்துவிட்டது”.
“குறிப்பாக விஜய்யுடன் நடிப்பது புதிய அனுபவம். மிகச் சிறப்பாக நடனம் ஆடுகிறார். இவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்,” என்றார் ஸ்ரீதேவி.