Home நாடு ரோன்97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்தது!

ரோன்97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்தது!

461
0
SHARE
Ad

petrolகோலாலம்பூர், நவம்பர் 19 – இன்று முதல் ரோன்97 பெட்ரோல் விலை, 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு 2.55 ரிங்கிட் என்ற அளவில் விற்கப்படவுள்ளது.

இன்று அதிகாலை 12 மணி முதல் இந்த விலைக் குறைவு அமலுக்கு வந்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இது  குறித்து பெட்ரோன் பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் டத்தோ ஆலாங் சாரி இஷாக் கூறுகையில், நேற்று முன்னதாக தங்களுக்கு இந்த அறிவிப்பு கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து இந்த விலைகுறைப்பு குறித்து அனைத்து எண்ணெய் விற்பனை முகவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடைசியாக, கடந்த செப்டம்பர் மாதம் இந்த பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் செப்டம்பர் 3-ம் தேதி, அரசாங்கம் எண்ணெய் விலையில் அளித்து வந்த மானியத்தை குறைத்ததால் ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்தன.