நவம்பர் 18 – ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திரையுலகப் பிரபலங்களின் படக் காட்சிகள்:
படத்தின் பாடல் வெளியீட்டு விழா…இடமிருந்து கவிஞர் வைரமுத்து, அனுஷ்கா, ரஜினி, சோனாக்ஷி, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ஒளிப்பதிவாளர் ரத்னவேல்….
லிங்கா படத்தின் இயக்குநர் கே.எஸ்.இரவிக்குமார்………….ஆறே மாத கால அவகாசத்திற்குள் இந்தப் படத்தை இயக்கி முடிக்க இரவிக்குமார் ஒருவரால்தான் முடியும் என்ற பாராட்டை ரஜினியிடமிருந்து மேடையிலேயே பெற்றார்.
லிங்கா இசை வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இயக்குநர் அமீர், ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என்றும் தனது உரையில் கொளுத்திப் போட்டு, மறுநாள் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றார்.
தந்தை பாடல் எழுதிய அதே படத்தில் தானும் எழுதிய வைரமுத்துவின் மகன் பாடலாசிரியர் மதன் கார்க்கி…..
ரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை வழங்கிய பழம் பெரும் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்…
லிங்கா படத்தின் இரண்டு அழகுக் கதாநாயகிகள் – அனுஷ்கா, சோனாக்ஷி இடையில் ரஜினி. “அரசியலுக்கு வர பயப்படவில்லை. வந்தால் வெல்ல வேண்டும். நாளை நடப்பதை யாரறிவார்…” என்றெல்லாம் விழா மேடையில் பேசி, ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த விவாதப் பொருளை மீண்டும் ஒருமுறை தன் வாயாலேயே தமிழகத்திற்குள் உலவவிட்டிருக்கின்றார், ரஜினி…
எதிர்வரும் டிசம்பர் 12ஆம் தேதி – ரஜினியின் பிறந்த நாளன்று லிங்கா உலகம் எங்கும் திரையீடு காண்கின்றது. லிங்கா பட முன்னோட்டமும் இந்த இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.