Home கலை உலகம் ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழா படக் காட்சிகள் (தொகுப்பு 1)!

‘லிங்கா’ இசை வெளியீட்டு விழா படக் காட்சிகள் (தொகுப்பு 1)!

825
0
SHARE
Ad

சென்னை, நவம்பர் 18 – ரஜினிகாந்தின் ‘லிங்கா’ பட இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடந்தேறியது. கே.எஸ்,இரவிக்குமாரின்  இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் தேதி, ரஜினிகாந்த் பிறந்த நாளன்று உலகம் எங்கும் திரையீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajni Linga Audio launch

விழா நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்கும் ரஜினி – வழக்கத்திற்கு மாறாக, லிங்கா பட இசை வெளியீட்டு விழாவுக்கு கோட்டும் சூட்டும் அணிந்து வந்து அசத்தினார்…

#TamilSchoolmychoice

Linga Audio launch 1

பாடல்கள் – இசை வெளியீடு – (இடமிருந்து) படக் கதாநாயகி அனுஷ்கா, இயக்குநர் இரவிக்குமார், கவிஞர் வைரமுத்து, ரஜினி, படத் தயாரிப்பாளர் ரோக்லைன் வெங்கடேஷ், மற்றொரு கதாநாயகி சோனாக்‌ஷி சின்ஹா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு….

Sonakshi Sinha - Linga Audio Launch

படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவரான சோனாக்‌ஷி சின்ஹா. அனுஷ்கா, சோனாக்‌ஷி இருவருமே முதன் முறையாக ரஜினியோடு லிங்கா படத்தில் இணைகின்றார்கள்.

Vairamuthu Linga Audio Launch 400 x 600

லிங்கா பட இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து….

Santhanam Linga Audio Launch 400 x 600

முதன் முறையாக ரஜினியுடன் இணையும் உற்சாகத்தில் நடிகர் சந்தானம்….

Anushka Linga Audio Launch 400 x 600

படத்தின் இரண்டு கதாநாயகியரில் ஒருவரான அனுஷ்கா…

Actor Sutheep with Vairamuthu Linga Audio Launch

நான் ஈ – படத்தில் வில்லனாக வந்து கலக்கிய கன்னட நடிகர் சுதீப்புடன் அளவளாவும் கவிஞர் வைரமுத்து….

Actor Vijayakumar Linga Audio Launch 400 x 600

 நடிகர் விஜயகுமார்….

Director Shankar Linga Audio Launch 400 x 600

 ரஜினியை வைத்து மறக்க முடியாத ‘எந்திரன்’ தந்த இயக்குநர் ஷங்கர்