Home கலை உலகம் சிட்னியில் புதிய பட அறிமுக விழாவில் ஏஞ்சலினா ஜோலி! (படக் காட்சிகள்)

சிட்னியில் புதிய பட அறிமுக விழாவில் ஏஞ்சலினா ஜோலி! (படக் காட்சிகள்)

767
0
SHARE
Ad

 US actress-director Angelina Jolie arrives at the world premiere of 'Unbroken' in Sydney, Australia, 17 November 2014. Unbroken is the second film which Jolie has directed.  EPA/DAN HIMBRECHTS AUSTRALIA AND NEW ZEALAND OUTசிட்னி, நவம்பர் 18 – பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி சிட்னிக்கு வருகை மேற்கொண்டுள்ளார். அவர் சொந்தமாக இயக்கியுள்ள ‘அன்புரோக்கன்’ (Unbroken) என்ற ஆங்கிலத் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 2015இல் உலகம் எங்கும் திரையீடு காணவிருக்கின்றது.

Angelina Jolie Unbroken premiere

அன்புரோக்கன் பட அறிமுக விழாவுக்கு ஒய்யார உடையில் வருகை தந்த ஏஞ்சலினா ஜோலியின் அழகுத் தோற்றம்…

#TamilSchoolmychoice

US actor Brad Pitt arrives at the world premiere of 'Unbroken' in Sydney, Australia, 17 November 2014. Unbroken is the second film which his wife Angelina Jolie has directed.  EPA/DAN

அன்புரோக்கன் பட அறிமுக விழாவுக்கு வருகை தந்த ஜோலியின் கணவர் பிராட் பிட்…

ஏஞ்சலினா ஜோலி பிரபல கவர்ச்சி நடிகையாகத் திகழ்ந்தாலும், படங்களை இயக்குவதிலும் ஆர்வம் உள்ளவர். அன்புரோக்கன், ஜோலியின் இயக்கத்தில் வெளிவரும் இரண்டாவது திரைப்படமாகும்.

அதனை முன்னிட்டு அந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று ஆஸ்திரேலிய நகரான சிட்னியில் நடைபெற்ற அறிமுக விழா ஒன்றில் ஜோலி கலந்து கொண்டார்.

அவருடன் அவரது கணவர் பிரபல நடிகர் பிராட் பிட்டும் கலந்து கொண்டார்.

AUSTRALIA ANGELINA JOLIE

தனது பட அறிமுக விழாவிற்கு வருகை தந்த ஏஞ்சலினா ஜோலி, இன்று (18 நவம்பர்) புகழ் பெற்ற சிட்னி பாலத்தின் முன் நின்று பத்திரிக்கையாளர்களுக்கு புகைப்படத்திற்காக காட்சி தந்தார்.

AUSTRALIA ANGELINA JOLIE

சிட்னி பாலத்தின் முன்னால் நின்று பத்திரிக்கையாளர்களுக்கு காட்சி தரும் ஏஞ்சலினா ஜோலியின் மற்றொரு அழகுத் தோற்றம்…

படங்கள் : EPA