Home கலை உலகம் மலேசியாவில் பிறந்த நாள் கொண்டாடிய விவேக்!

மலேசியாவில் பிறந்த நாள் கொண்டாடிய விவேக்!

607
0
SHARE
Ad

vivek-கோலாலம்பூர், நவம்பர் 20 – ‘சின்னக் கலைவாணர்’ என்று ரசிகர்களால் பாராட்டப்படும் விவேக் தன்னுடைய பிறந்த நாளை மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் கொண்டாடினார்.

தமிழ் சினிமாவில் முன்னனி காமெடி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் விவேக். பல ஆண்டுகளாக தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

நகைச்சுவை மேதை விவேக் திரையில் நகைச்சுவையோடு பகுத்தறிவுக் கருத்துக்களையும் சொல்வதில் வெற்றி கண்டவர் என்பதால் அவரை சின்னக் கலைவாணர் என்று பாராட்டுகின்றனர் ரசிகர்கள்.

#TamilSchoolmychoice

நிஜத்திலும் தனது செயல்கள் மூலம் வேறுபட்ட மனிதராக நிலை நிறுத்தி வருகிறார். தனி மனிதராக அவர் ஆரம்பித்த புசுமைத் திட்டம் மூலம் பல லட்சம் மரங்களை நட்டு, சுற்றுச் சூழல் நண்பனாகத் திகழ்கிறார்.

“விவேக்குக்கு இன்று பிறந்த நாள். ஆனால் இந்த நாளைக் கொண்டாட அவர் இந்தியாவில் இல்லை. மலேசியாவுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்த அவர் இங்கேயே தன் பிறந்த நாளைக் கொண்டாடினார்”.