மும்பை, நவ. 23 – ஐந்து முறை அனைத்துலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள இந்தியாவின் மேரி கோம் (படம்), குத்துச்சண்டை பயிற்சிக் கழகம் (அகாடெமி) ஒன்றை அமைக்க 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேரி கோமின் சொந்த மாநிலமான மணிப்பூரில் அமையவுள்ள இந்த பயிற்சிக் கழகத்திற்கு
தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்று இந்நிதியை அளித்துள்ளது. ‘சாம்பியன்கள் தேவை’ (Need for Champions) என்ற பெயரில் ஈடல்வெய்ஸ் டோக்கியோ லைஃப் இன்சூரன்ஸ் என்ற இந்நிறுவனம் தொடங்கியுள்ள திட்டத்தின் கீழ், இந்த நிதி அளிக்கப்பட்டது.
தாம் குத்துச்சண்டை களத்தில் கால்பதித்த நாள் முதற்கொண்டே தனக்கு தோள் கொடுத்து வருவதற்காக இந்நிறுவனத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக 31 வயதான மேரி கோம் கூறியுள்ளார்.
2012, லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தவர் மேரி கோம் என்பது குறிப்பிடத்தக்கது.
“எனது அயராத கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதி காரணமாக இந்தியாவில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது,” என்கிறார் மேரி கோம்.
இவரது வாழ்க்கை வரலாறு அண்மையில் பிரியங்கா சோப்ரா நடிப்பில் இந்தித் திரைப்படமாக வெளிவந்தது.
பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த மேரி கோம்மின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் மேரி கோம் இந்தித் திரைப்படம்…