Home நாடு மானியங்கள் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் துன் மகாதீர் கருத்து

மானியங்கள் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் துன் மகாதீர் கருத்து

574
0
SHARE
Ad

Mahathirபுத்ராஜெயா, நவம்பர் 23 – ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மானியத்தை உடனடியாக அறவே நிறுத்தக்கூடாது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களின் சுமையை ஒரேடியாக ஏற்றிவிடாமல் இந்த மானியத்தை படிப்படியாக குறைக்க  வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

“பொதுவாக மானியங்களை குறைக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்வேன். ஆனால் இது எனது கருத்து மட்டுமே. எனினும் மானியங்களை நிறுத்துவது என்பதற்கு கால அளவு வேண்டும். இது படிப்படியாக நிகழ வேண்டும்,” என்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய துன் மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

உள்ளூர் வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் துறை அமைச்சர் டத்தோ
ஹசான் மாலேக் நேற்று ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மானிய குறைப்பு
குறித்து அறிவித்திருந்தார். இது தொடர்பாக கருத்துரைக்கும்படி மகாதீரிடம்
செய்தியாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.