இஸ்லாமாபாத், நவம்பர் 26 – பாகிஸ்தான் 2020-ம் ஆண்டிற்குள் 200 அணு ஆயுதங்களைத் தயாரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க இராணுவ ஆய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
“உலகம் முழுவதும் அணு ஆயுதங்களைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஆசியாவில் இந்த நிலை எதிர்மாறாக உள்ளது. அங்கு அதிக அளவில் அணு ஆயுதங்களின் தயாரிப்பு உள்ளது. உலகில் மற்ற நாடுகளை விட பாகிஸ்தான் மிக வேகமான அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.”
“2020-ம் ஆண்டிற்குள் அங்கு 200 அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியும். அந்த அளவிற்கு அங்கு மூலப்பொருட்கள் நிறைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் 90 முதல் 110 அணு ஆயுதங்கள் தயாரிக்கவல்ல செறிவூட்டப்பட்ட பொருள் இருப்பது குறிப்பிடத்தக்கது.