Home நாடு அரசு அடாவடியாக செயல்படுகிறதா? சாஹிட் ஹமிடி மறுப்பு

அரசு அடாவடியாக செயல்படுகிறதா? சாஹிட் ஹமிடி மறுப்பு

533
0
SHARE
Ad

Ahmad-Zahid-Hamidiகோலாலம்பூர், நவம்பர் 25 – அரசாங்கம் அடாவடித்தனமாக செயல்படுவதாகக் கூறப்படும் விமர்சனத்தை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

எந்தவொரு நபரும் தகுந்த காரணங்களோ ஆதாரங்களோ இன்றி கைது செய்யப்படுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அரசுக்கெதிரான கருத்துக்களைக் கூறும் எதிர்க்கட்சியினரை வாய்மூடச் செய்யும் விதமாக, தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

#TamilSchoolmychoice

“வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்கள், பொய்யுரைகள், அவதூறுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும், பெரும்பாலான மலேசியர்கள் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஆதரிக்கின்றனர். ஏனெனில் இத்தகைய பொறுப்பற்ற குழுக்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.”

“இணையம் வழி பொய்கள், அவதூறுகள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை பரப்புகிறவர்களால் மலேசியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளது,” என்றார் சாஹிட் ஹமிடி.

கடந்த 1969ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் மூலம் நாம் பாடம் கற்றுள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், அவையெல்லாம் நல்லதொரு கட்டமைப்பு குலைந்துவிடாமல் இருக்கும் வகையில் கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்திருக்கிறது என்றார்.

தேச நலன், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளாது என்றார் அவர்.