கடந்த செவ்வாய்கிழமை, நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சியான் அபோட் வீசிய பவுன்சரில், தெற்கு ஆஸ்திரேலிய அணி வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தலையில் பந்துபட்டவுடன் விளையாட்டு மைதானத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்த பிலிப் ஹியூக்ஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கோமா நிலையில் இருந்தார்.
அவரது நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், உயிர் பிழைப்பது கடினம் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் பீட்டர் புரூக்னர் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பில் ஹக்கீஸ் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.