Home கலை உலகம் இளையராஜா என் கடவுள், தலைவன், உயிர் – தனுஷ்

இளையராஜா என் கடவுள், தலைவன், உயிர் – தனுஷ்

529
0
SHARE
Ad

dhanushசென்னை, நவம்பர் 27 – இளையராஜா தான் எனது கடவுள், தலைவன், இசை, உயிர் என்று தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கி வரும் ‘வை ராஜா வை’ படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கரா ராஜா இசைப்பணியை கவனித்துள்ளார். படத்தில் தனுஷ் எழுதிய பாடலை யுவன் இசையில் இளையராஜா பாடியுள்ளார்.

இந்நிலையில் தனுஷ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “என் கடவுள் !! என் தலைவன் !! என் இசைஞானி !! என் இசை !! என் உத்வேகம் !! என் உயிர் !! என் இதயத்துடிப்பு !! என் இளையராஜா என்று தெரிவித்துள்ளார்”. இதை பார்த்த இசைஞானி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice