Home உலகம் சிகாகோவில் ஒபாமாவை சுற்றி வளைத்து கேள்வி கேட்ட பொதுமக்கள்!

சிகாகோவில் ஒபாமாவை சுற்றி வளைத்து கேள்வி கேட்ட பொதுமக்கள்!

429
0
SHARE
Ad

obamaசிகாகோ, நவம்பர் 28 – அமெரிக்க அதிபர் ஒபாமா சிகாகோவில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிகொண்டிருந்த போது, பொதுமக்கள் பலர் அவரை சுற்றி வளைத்து கேள்வி கேட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தனது சொந்த ஊரான சிகாகோ சென்ற ஒபாமா, அங்கு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். ஒபாமா தனது பேச்சை தொடங்கிய  நிமிடங்களில், ஒருவர் ஒபாமாவின் பேச்சில் குறுக்கிடும் வகையில் கேள்வி எழுப்பினார்.

எனினும் அவரை அமைதிபடுத்தும் விதமாக பேசிய ஒபாமா, “அனைவருக்குமே தனிப்பட்ட கருத்துகள் உண்டு. ஆனால் நேரம் இல்லாத காரணத்தால் அனைவரது கருத்தையும் நான் தனித்தனியாக கேட்க முடியாது” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து அவர் மேலும் பேச முயன்ற பொழுது, இளம்பெண் ஒருவர் ஒபாமாவை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும் அவர் “மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதை நிறுத்துங்கள் ஒபாமா!” என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளைக் காட்டி சைகை செய்தார்.

இதையடுத்து மேலும் இருவர் எழுந்து யாரையும் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றக் கூடாது என்று கோஷமிட்டனர். அதனால் அங்கு சிறிது நேரம் குழப்பம் நீடித்தது.

நிலைமை மோசமடைவதை உணர்ந்த ஒபாமா, “சரி நீங்கள் கூறுவதை நான் கேட்கிறேன். சிறிது நேரம் அமைதியாக இருங்கள். இந்த இடத்தில் இருந்து உங்களை யாரும் வெளியேற்றமாட்டார்கள். உங்கள் கருத்துகளை நான் கேட்கிறேன்” என்று கூறினார். இதனால் கூட்டத்தில் சற்று அமைதி திரும்பியது.

இதைத் தொடர்ந்து பேசிய ஒபாமா, “அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருக்கும் தொழிலாளர்களால் நமது நாட்டின் குடியுரிமை சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களால் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது”.

“அதனால் இந்த முடிவு அமெரிக்காவின் நன்மைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார். ஒபாமாவின் விளக்கத்திற்குப் பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் அமைதியுற்றனர்.

அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருக்கும் சுமார் ஒரு கோடி பேரை நாட்டை விட்டு வெளியேற்ற குடியுரிமை சீர்திருத்தம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.