Home கலை உலகம் படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம்!

படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம்!

496
0
SHARE
Ad

vishalசென்னை, நவம்பர் 29 – சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் , ஹன்சிகா நடித்து வரும் படம் ‘ஆம்பள’. இப்படம் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது.

’பாண்டிய நாடு’, ’நான் சிகப்பு மனிதன்’, ‘பூஜை’, என விஷால் தனது சொந்தப் படங்கள் மட்டுமல்லாமல் , மற்ற நடிகர்களின் படத்தையும் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடத் துவங்கியுள்ளார். இப்போது அவர் நடித்து வரும் ‘ஆம்பள’ படத்தின் சண்டைக் காட்சியில் காலில் அடிபட்டுவிட்டதாம்.

aambala-movie-posterஇதுகுறித்த விஷால் தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் ”சண்டை காட்சியில் அடிபட்டுவிட்டது , நடக்க முடியவில்லை, ஒருவேளை தசை பிடிப்பாக இருக்கலாம்” என டுவீட் செய்தார்.

#TamilSchoolmychoice

”விஷால் இப்போது நலமாக இருக்கிறார். தசை பிடிப்புதான். வேறொன்றுமில்லை. ‘ஆம்பள’ பொங்கல் வெளியீடு.” என்று குஷ்புவும் டுவீட் செய்துள்ளார்.