Home உலகம் அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்:1400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்:1400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

445
0
SHARE
Ad

USA-flights-cancelledநியூயார்க், நவம்பர் 29 – அமெரிக்காவில் வடகிழக்கு மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், பாஸ்டன், பிலாடெல்பியா உள்ளிட்ட பல மாகாணங்களில் சாலைகள் மற்றும் வீடுகளின் மீது 2 அங்குல உயரத்திற்கு பனிபடர்ந்து காணப்படுகின்றது. கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை.

மேலும் சாலைகளிலும் பனி படர்ந்து கிடப்பதால் வாகனங்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கார் போன்ற வாகனங்களின் போக்குவரத்து மட்டுமல்லாமல் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

winterchaosவடகிழக்கு அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் சுமார் 1,469 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 7,997 விமானங்கள் வழக்கத்தை விட காலதாமதமாக வந்து  சேர்ந்துள்ளன.

அமெரிக்காவில் நேற்று முன்தினம் ‘நன்றி அறிவிப்பு’ (Thanksgiving day) விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனைக் கொண்டாட வழக்கமாக 46.3 மில்லியன் மக்கள் வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் பனிப்புயல் காரணமாக அவர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டது.