Home இந்தியா தமாகா.விற்கு மீண்டும் அதே சைக்கிள் சின்னம்! திருச்சியில் ஜி.கே.வாசன் அறிவிப்பு!

தமாகா.விற்கு மீண்டும் அதே சைக்கிள் சின்னம்! திருச்சியில் ஜி.கே.வாசன் அறிவிப்பு!

1365
0
SHARE
Ad

gk-vasanதிருச்சி, நவம்பர் 29 – ஜி.கே.வாசனின் கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.க) என்று பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் சின்னமாக சைக்கிள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் பொன்மலையில் இன்று தனது புதிய கட்சி அறிவிப்பிற்கான மாநாட்டினை தொடங்கினார்.

மாநாட்டை ஒட்டி கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சென்னையில் ஜி.கே.வாசன் தன்னுடைய புதிய கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தினார்.

இன்று மாலை 5 மணியளவில் கட்சியின் கொடியை தியாகி அருணாசலம் ஏற்ற தொண்டர்கள் ஆராவாரத்திற்கு இடையே மாநாட்டை தொடங்கினார் ஜி.கே.வாசன்.

#TamilSchoolmychoice

திருச்சியில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து 8 ஆயிரம் வாகனங்களில் ஜி.கே.வாசன் கட்சியினர் குவிந்துள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

விழா மேடையில் ஏறிய வாசன், தொண்டர்களின் ஆராவாரத்திற்கு இடையே கட்சியின் பெயரையும் சின்னத்தையும் அறிமுகம் செய்தார்.இந்தநிலையில் நேற்றுமாலை சரியாக 5 மணிக்கு ஜி.கே.வாசன் முன்னனி தலைவர்களுடன் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்தார்.

அதைதொடர்ந்து பொதுக்கூட்ட மைதானத்தில் 100 கிலோ எடையுள்ள பிரமாண்ட பலூனை ஜி.கே.வாசன் ஆகாயத்தில் பறக்கவிட்டார். அப்பொழுது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.

gk-vasan-balloonபின்னர், பொதுக்கூட்ட மேடையை ஜி.கே.வாசன் சுற்றிப்பார்த்தார். அதன்பின்பு ஜி.கே.வாசன் கட்சி முன்னனி தலைவர்களுடன் மேடைக்கு அருகில் உட்கார்ந்து ஆலோசனை மேற்கொண்டார்.

மழை கொட்டி வரும் நிலையிலும் பல லட்சம் மக்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பொதுக்கூட்ட நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மழை காரணமாக மாலை 5 மணிக்கு தொடங்கியது.

தொண்டர்களின் ஆராவாரத்திற்கு இடையே உரையாற்றிய ஜி.கே.வாசன் “நம்முடைய இயக்கம் இன்றுமுதல் தமிழ் மாநில காங்கிரஸ் என்று அழைக்கப்படும் என்றார். கட்சியின் சின்னம் சைக்கிள் என்றும் அவர் கூறினார்”.

“அப்போது தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர். காமராஜர் புகழ் ஓங்குக. மூப்பனார் புகழ் ஓங்குக” என்று கூறினார் ஜி.கே.வாசன். சொன்னபடி அடாது மழை பெய்தாலும் விடாமல் மாநாட்டை தொடங்கி தனது பலத்தை காட்டிவிட்டார் ஜி.கே.வாசன்.