புது டெல்லி, டிசம்பர் 3 – சாம்சுங் நிறுவனம் தனது சொந்த இயங்குதளமான ‘டைசென்’ (Tizen)-ல் இயங்கும் திறன்பேசிகளை முதல் முறையாக இந்தியாவில் வெளியிட தீர்மானித்துள்ளது.
சாம்சுங் நிறுவனத்தின் பெரும்பான்மையான திறன்பேசிகள் கூகுளின் அண்டிரொய்டு இயங்குதளத்தின் அடிப்படையில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சாம்சுங் தனது சொந்த இயங்குதளமான டைசெனை வர்த்தக ரீதியாக வலுபெறச் செய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.
அதன் முதற்கட்டமாக டைசென் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் Z1 திறன்பேசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்சமயம் இதன் விலை, 100 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனை எதிர்வரும் 10-ம் தேதி, இந்தியாவில் நடைபெற இருக்கும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது சாம்சுங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த Z1 திறன்பேசிகளை சாம்சுங், முதலில் ரஷ்யாவில் அறிமுகப்படுத்த இருந்தது குறிப்பிடத்தக்கது