Home கலை உலகம் தனுஷுடன் நடிக்கும் எமி ஜாக்சன்!

தனுஷுடன் நடிக்கும் எமி ஜாக்சன்!

474
0
SHARE
Ad

dhanushசென்னை, டிசம்பர் 3 – வேலையில்லா பட்டதாரி படக்குழு மீண்டும் இணைகிறது. இந்தப் புதிய படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.

தனுஷ் தமிழ், இந்திப் படங்களில் ஓய்வில்லாமல் நடித்துவருகிறார். ‘அனேகன்’, ‘மாரி’, ‘ஷமிதாப்’ படங்களில் நடிக்கும் தனுஷ் அடுத்து வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

எமி ஜாக்சன் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். இதை தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.

#TamilSchoolmychoice

பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. எமி ஜாக்சன் ‘ஐ’ படத்துக்குப் பிறகு உதயநிதி, தனுஷுடன் நடிக்க இருக்கிறார்.