Home கலை உலகம் ஒரு நடிகனாக இது எனக்கு ஏமாற்றமே – வாலு வெளியீடு குறித்து சிம்பு!

ஒரு நடிகனாக இது எனக்கு ஏமாற்றமே – வாலு வெளியீடு குறித்து சிம்பு!

659
0
SHARE
Ad

Vaalu_1811_mசென்னை, டிசம்பர் 2 – விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்து உருவாகி வரும் படம் ‘ வாலு’. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ஒரு பாடல் காட்சி மாட்டுமே மீதம் இருக்கிறது.

குறளரசன் இசையில் டி.ஆர். பாடியுள்ள ஒரு பாடலில் சிம்பு,  எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித், என நான்கு கெட்டப்களில் நடனம் ஆட உள்ளார். இதில் நான்கு  தலைமுறை நாயகிகளும் நடனம் ஆட உள்ளார் சிம்பு.

இப்போதைக்கு சிம்ரன் மட்டுமே சிம்புவுடன் நடனமாடுவது உறுதி ஆகியிருக்கிறது. சரோஜாதேவி, குஷ்பு, நயன்தாரா ஆகிய மூவரையும் நடனமாட வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். யார் யார் நடனம் ஆடுவார்கள் என்ற  முழுமையான தகவல் 7-ஆம் தேதிக்கு மேல் தெரியவருமாம்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அடுத்த செய்தியாக டிசம்பர் 25ல் ‘வாலு’ படம் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில் மீண்டும் படம் தள்ளிப் போடப்பட்டுள்ளது.

big_Vaalu_team‘வாலு’ பிப்ரவரியில் வெளியாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையில் சிம்பு கூறியதாவது; ” ஒரு நடிகனாக இந்த வருடமும் எனது படம் வெளியாகாதது எனக்கும் ஏமாற்றமே. எனினும், படம் கண்டிப்பாக ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்பதால் படத்தை பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளோம்”.

“எனவே, ‘வாலு’  பிப்ரவரியில் வெளியாகும் . ‘இது நம்ம ஆளு’ மே மாதம் விடுமுறையில் வெளியாகும் ” என சிம்பு தெரிவித்துள்ளார்.  பிப்ரவரி 3ல் சிம்புவின் பிறந்தநாள் என்பதால் படம் அன்றைய தினம் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.