Home கலை உலகம் வாலு தூளு! படம் தாறுமாறு! – சிம்பு ரசிகர்கள் புகழ்ச்சி

வாலு தூளு! படம் தாறுமாறு! – சிம்பு ரசிகர்கள் புகழ்ச்சி

651
0
SHARE
Ad

Vaalu-love-endravan-single-trackசென்னை, ஆகஸ்ட் 14- பல தடைகளைத் தாண்டி சிம்புவின் வாலு படம் இன்று இந்தியா முழுவதிலும் வெளியாகி, ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. பொது மக்களிடமிருந்தும் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது.

வாலு படத்தைப் பார்த்த சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

உதாரணத்திற்குச் சில பதிவுகள் கீழே:

#TamilSchoolmychoice

“எம்ஜிஆர், ரஜினி, அஜீத் தோற்றங்களில் சிம்பு தோன்றும் காட்சி தாறுமாறு! தாறுமாறு  பாடல் தாறுமாய் இருக்கிறது.மொத்தத்துல வாலு, தூளு!”

“தலயாக வந்த வாலு! (அட) தியேட்டரே அதிருதுப்பா!”

“மோதினா அடி- கஷ்டம்னா உதவி!”

“மோதினா அடிவிழும்; கஷ்டம்னா உதவி வரும்” என்று விஜய்யின் துப்பாக்கி பட வசனத்தோடு ஒப்பிட்டு,சிம்புவுக்கு விஜய் உதவி செய்ததைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் ஒரு ரசிகர்.

“வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க; வாலுவும் சரவணனும் ஒண்ணா ரிலீசானவங்க”

-என்று ரகளையாகப் பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.