Home இந்தியா வரம்பு மீறிப் பேசினால் மத்திய அமைச்சர்கள் மீது நடவடிக்கை – மோடி!

வரம்பு மீறிப் பேசினால் மத்திய அமைச்சர்கள் மீது நடவடிக்கை – மோடி!

436
0
SHARE
Ad

Narendra_Modi.06புதுடெல்லி, டிசம்பர் 3 – பொது இடங்களில் வரம்பு மீறிப் பேசினால் அதை சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவ்வாறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர்கள், பாஜகவைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பாஜக  நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி கூறியதாவது:- “பொது இடங்களில் பேசும் போது எப்படிப் பேசுகிறோம்? என்ன பேசுகிறோம்? என்பதை மத்திய அமைச்சர்களும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் புரிந்து கொண்டு பேச வேண்டும். பொது மக்களிடையே உரையாற்ற சில தகுதிகளும், வரம்பும் உள்ளன”.

#TamilSchoolmychoice

“இதைப் பொருள்படுத்தாமல் முந்திக் கொண்டு வரம்பு மீறிப் பேசினால் அதை என்னால் ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது. அவ்வாறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசுகையில், “இந்த நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்பட அனைவரும் ராமரின் பிள்ளைகள். இந்தச் சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை”.

“டெல்லியில் ராமரைப் பின்பற்றுபவர்கள் ஆட்சி அமைய வேண்டுமா? அல்லது சட்டவிரோதமான வழியில் வந்தவர்கள் ஆட்சி அமைய வேண்டுமா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.