Home தொழில் நுட்பம் மொசில்லாவைத் தொடர்ந்து ஆப்பிளும் கூகுள் தேடுபொறியினை நிறுத்துகிறது!

மொசில்லாவைத் தொடர்ந்து ஆப்பிளும் கூகுள் தேடுபொறியினை நிறுத்துகிறது!

530
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 3 – ஆப்பிள் நிறுவனம் தனது ‘சஃபாரி’ (Safari) உலாவியின் முதல் பக்கமாக இருக்கும் கூகுள் தேடுதல் தளத்தை மாற்ற உள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. இது தொடர்பாக ஆப்பிள், கூகுளுடனான ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்ளப்போவதாகவும் கூறப்படுகின்றது.

Final45_1024

ஆப்பிள் நிறுவனத்தின் உலாவியான சஃபாரியின் முதல் பக்கமாக கூகுள் இதுவரை இருந்து வருகின்றது. எனினும், ஆப்பிள் தனது உலாவியின் முதற்பக்கத்தை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், இரு நிறுவனங்களுக்கான ஒப்பந்தம் அடுத்த வருடத்துடன் முடிவுறுவதால், ஆப்பிள், தேடு பொறி தொடர்பாக மைக்ரோசாப்ட் மற்றும் யாஹூ நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

ஆப்பிளுடனான இந்த பேச்சுவார்த்தையில் மைக்ரோசாப்ட் முன்னிலை வகிப்பதால் அந்நிறுவனத்தின் ‘பிங்’ (Bing) தேடு பொறி, அடுத்த வருடத்தின் இறுதியில், சஃபாரி உலாவியின் முதற்பக்கமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

எனினும், தொழில்நுட்ப பத்தரிக்கைகள் சில, ஆப்பிள் இதற்கென பிரத்யேக தேடுபோறியினை உருவாக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றன.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னாள் பைபர் ஜாஃப்ரே என்ற ஆய்வாளர்கள், எதிர்வரும் 2015-ம் ஆண்டில் ஆப்பிள் தனது திறன்பேசிகளுக்கென பிரத்யேக தேடுபோறியினை உருவாக்க வாய்ப்புகள் இருப்பதாக ஆருடங்கள் கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மொசில்லாவுடனும் கூகுளின் ஒப்பந்தம் நிறுத்தம்:

தேடுபொறி விவகாரத்தில் ஆப்பிளுக்கு முன்பே மொசில்லா நிறுவனம் கூகுள் தேடுபொறியை தனது ‘ஃபயர்பாக்ஸ்’ (Firefox) உலாவியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக அந்நிறுவனம் ‘யாஹூ’ (yahoo) உடன் ஒப்பந்தம் ஒன்றி ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.