அங்காரா, டிசம்பர் 4 – கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதற்கொண்டு மூன்று நாட்களுக்கு இஸ்லாமிய நாடான துருக்கிக்கு போப்பாண்டவர் பிரான்சிஸ் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டார். அவருக்கு அந்நாட்டு அரசாங்கம் மிகச் சிறப்பான மரியாதை வழங்கி வரவேற்றது.
போப்பாண்டவர் வருகையின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:-
துருக்கிபோப்பாண்டவருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கி அழைத்துச் செல்லும் துருக்கியின் அதிபர் ரிசப் தாயிப் எர்டோகன். மத்திய கிழக்குப் பகுதியில் முஸ்லீம்-கிறிஸ்துவர்களுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் போப்பாண்டவரின் வருகை அமைந்தது.
இஸ்தான்புல் நகரின் புகழ்பெற்ற – அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய சுல்தான் அகமட் பள்ளிவாசலுக்கு வருகை தந்த போப்பாண்டவர், அந்த பள்ளி வாசலின் தலைமை முஃப்டி ரஹ்மி யாரானுடன் பிரார்த்தனை நடத்தினால்.
1609-1616ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல் வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். அதன் உள் சுவர்கள் நீல நில பளிங்குக் கற்களால் ஆனது என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இஸ்தான்புல் நகரின் செயிண்ட் ஜோர்ஜ் கிறிஸ்துவ தேவாலயத்திற்கு வருகை தந்த போப்பாண்டவரை கட்டியணைத்து வரவேற்கும் தேவாலயத்தின் தலைவர்…
இஸ்தான்புல்லில் உள்ள செயிண்ட் எஸ்பிரிட் கிறிஸ்துவ தேவாலயத்திற்கு வருகை தந்த போப்பாண்டவர் அங்கு அமைதியின் சின்னமான வெண்புறாவை பறக்க விடுகின்றார். 1846ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்த தேவாலயம், இஸ்தான்புல்லில் உள்ள இரண்டாவது பெரிய ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். கேத்திட்ரல் ஆஃப் ஹோலி ஸ்பிரிட் என்றும் இந்த தேவாலயத்தை அழைப்பார்கள்.
தனது துருக்கிய வருகையின் ஒரு பகுதியாக ஈராக், சிரியா நாட்டின் அகதிகளையும் போப்பாண்டவர் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தார்.
படங்கள்: EPA