Home இந்தியா இங்கிலாந்து ராணியை மிஞ்சிய சோனியா காந்தி!

இங்கிலாந்து ராணியை மிஞ்சிய சோனியா காந்தி!

606
0
SHARE
Ad

sonia_richபுதுடெல்லி, டிசம்பர் 4 – இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசெபத்தை விட சோனியாவிடம் அதிக சொத்துக்கள் இருப்பதாக பிரபல ஊடகம் கூறியதால், இதுகுறித்து விரிவாக விசாரிக்கவேண்டும் என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் 12-வது பெரும் பணக்காரராக சோனியா காந்தி விளங்குவதாக கடந்த ஆண்டு ஃஹப்பிங்டன் போஸ்ட் என்ற இணைய ஊடகம் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்தக் கருப்புப் பணப் பதுக்கல் குறித்து விரிவாக விசாரிக்கப்படவேண்டும் என்று தற்போது வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஃஹப்பிங்டன் போஸ்டில், சோனியா காந்திக்கு 2 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ராணி 2-ஆம் எலிசெபெத்தின் சொத்து மதிப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மேலும் சிரிய அதிபர் பஷர் அல் அஸ்ஸாத், ஓமன் சுல்தான் குபாஸ் பின் சயத் ஆகியோரை விட அதிக பணக்காரராகவும் சோனியா திகழ்கிறார்.

பல மன்னர்கள், அதிபர்கள், சுல்தான்கள், ராணிகள் இடம் பெற்றுள்ள இப்பட்டியலில் சாதாரண ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பெயர் இடம் பெற்றிருப்பது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

இதுகுறித்து ராம்ஜேத்மலானி கூறுகையில் “ராஜீவ் காந்திக்கே 2.2 பில்லின் டொலர் கருப்புப் பணம் இருப்பதாக ஒரு புகார் உள்ளது. எனவே இதுகுறித்தும் சோனியாவின் சொத்து குறித்தும், கருப்புப் பணம் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.