Home நாடு பிபிபி கட்சியின் புதிய உதவித் தலைவர்கள் தேர்வு!

பிபிபி கட்சியின் புதிய உதவித் தலைவர்கள் தேர்வு!

678
0
SHARE
Ad

pppகோலாலம்பூர், டிசம்பர் 4 – கடந்த நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்று முடிந்த பிபிபி கட்சித் தேர்தல்களின் புதிய உதவித் தலைவர்களாக நால்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடப்பு கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகபாலன், முன்னாள் துணையமைச்சர் டத்தோ மெக்லின் டி குருஸ், கூட்டரசுப் பிரதேச மாநில பிபிபி தலைவர் டத்தோ ஆர்.சந்திரகுமணன், டத்தோ இளையப்பன் ஆகியோரே அந்த நால்வராவர்.

Kayveas
டான்ஸ்ரீ கேவியஸ்

ஏற்கனவே, டான்ஸ்ரீ கேவியஸ் பிபிபி கட்சியின் தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளில் ஒன்றான பிபிபி கட்சியில் தேசியத் துணைத் தலைவர் என்ற பதவி மட்டும் இல்லை. மாறாக, உதவித் தலைவர்கள் மட்டுமே பதவி வகிப்பர்.

3 உதவித் தலைவர்கள் பதவிகளுக்கு மொத்தம் ஆறு பேர் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், ஒரு சிலர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதால், மேற்குறிப்பட்ட நால்வரும் உதவித் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அவர்களோடு, பேராக்கைச் சேர்ந்த ஓங் என்பவரும், கூட்டரசுப் பிரதேச தித்திவாங்சா தொகுதியின் பிபிபி தலைவர் டத்தோ சக்காரியாவும் உதவித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் மூலம், பிபிபி கட்சி மொத்தம் ஆறு தேசிய உதவித் தலைவர்களைக் கொண்டிருக்கும்.