பெர்லின், டிசம்பர் 4 – ஊழல் மிகக் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் 2 இடங்கள் பின்தங்கி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது சிங்கப்பூர். ஊழல் மிகுந்துள்ள நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பிரன்சி இண்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான பட்டியலை அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்டது.
இதில் ஊழல் விவகாரங்கள் மிகவும் குறைவாக உள்ள நாடாக உலகிலேயே டென்மார்க் முதல் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து நியூசிலாந்து, பின்லாந்து, சுவீடன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. சிங்கப்பூருக்கு இப்பட்டியலில் ஏழாவது இடம் கிடைத்துள்ளது.
ஊழல்கள் மலிந்த நாடாக வடகொரியாவும், சோமாலியாவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஊழல்கள் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியல் வருமாறு:
1. டென்மார்க்
2. நியூசிலாந்து
3. பின்லாந்து
4. சுவீடன்
5. நார்வே
6. சுவிட்சர்லாந்து
7. சிங்கப்பூர்
8. நெதர்லாந்து
9. லக்சம்பெர்க்
10. கனடா