Home வணிகம்/தொழில் நுட்பம் திறன்பேசிகளின் விலை கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும்: ஐடிசி ஆய்வு!

திறன்பேசிகளின் விலை கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும்: ஐடிசி ஆய்வு!

545
0
SHARE
Ad

smartphonesவாஷிங்டன், டிசம்பர் 6 – உலக அளவில் திறன்பேசிகளின் வளர்ச்சி அடுத்த சில வருடங்களில்  அபரிதமாக இருக்கும் என ஐடிசி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. திறன்பேசிகளின் தேவைகள் மற்றும் வளர்ச்சி, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டியை ஏற்படுத்தும். இதனால் திறன்பேசிகளின் விலையும் அதிரடியாக குறைய வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஐடிசி வெளியிட்டுள்ள கருத்தாய்வுகளின்படி  “எதிர்வரும் 2015-ம் ஆண்டில் உலக அளவில் சுமார் 1.5 பில்லியன் திறன்பேசிகள் விற்பனை செய்யப்படும். இது நடப்பு ஆண்டை விட 12.2 சதவீதம் அதிகமாகும். திறன்பேசிகளின் தேவை அதிகரிப்பதால், பயனர்களைக் கவர பல்வேறு  நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில், திறன்பேசிகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன.”

Xiaomi-Smartwatch“இந்தியா போன்ற முக்கிய சந்தைகளில் எதிர்வரும் 2018-ம் ஆண்டில், சுமார் 102 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில், முக்கிய நிறுவனங்களின் திறன்பேசிகள் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள். இவை மிகக் குறைந்த விலையில், திறன்பேசிகளைத் தயாரித்து விற்பனை செய்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணங்கள் சியாவுமி மற்றும் ரெட்மி திறன்பேசிகள்.”

#TamilSchoolmychoice

“தற்போது அனைத்துலக சந்தையின் நிலவரப்படி, 80 சதவீதம் அண்டிரொய்டு திறன்பேசிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆப்பிளின் ஐஓஎஸ் 13 சதவீத்தை ஆக்கிரமித்துள்ளது. எனினும் எதிர்வரும் காலத்தில், டைசென், ஃபயர்பாக்ஸ் போன்ற புதிய இயங்குதளங்களைக் கொண்ட திறன்பேசிகளும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெறக் காத்திருக்கின்றன” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.