Home உலகம் பாகிஸ்தானில் 10 குந்தைகளுக்கு எச்ஐவி இரத்தம் செலுத்தப்பட்ட கொடூரம்!   

பாகிஸ்தானில் 10 குந்தைகளுக்கு எச்ஐவி இரத்தம் செலுத்தப்பட்ட கொடூரம்!   

421
0
SHARE
Ad

aids_babiesஇஸ்லாமாபாத், டிசம்பர் 5 – பாகிஸ்தானில் இரத்தம் செலுத்தப்பட்ட 10 குழந்தைகளுக்கு எச்ஐவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவத்துறையின் கவனக் குறைவால் பல குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ள கொடூரம் அந்நாட்டை உலுக்கி உள்ளது.

பாகிஸ்தானில் 5 வயது முதல் 16 வயதுள்ள குழந்தைகள் பலர் ‘தலசீமியா’ (Thalassaemia) என்ற இரத்த அழிவு நோய் தாக்கி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை பாதிக்கும். அத்துடன் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அக்சிஜனை எடுத்துச்செல்லும் இரத்த சிகப்பணுக்களையும் பாதிக்கும். இந்நோய் தாக்குதல் உள்ளவர்களுக்கு தொடர்ந்து இரத்த மாற்றம் செய்ய வேண்டும்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மருத்துவமனைகளில் இரத்தம் மாற்றப்பட்ட 10 குழந்தைகளுக்கு எச்ஐவி நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு எச்ஐவி தொற்று உள்ள இரத்தம் ஏற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலசீமியா கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் யாஸ்மின் ரஷித் கூறுகையில், ‘‘10 வருடத்திற்கு முன்பே இரத்த தானம் குறித்த சட்டத்தை அமல்படுத்த நான் தீவிரமாக குரல் கொடுத்தேன்.

ஆனால், அந்த சட்டங்கள் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால், பெரும்பாலானவர்கள் எச்ஐவி போன்ற பல்வேறு தொற்று நோய் பாதிக்கப்பட்ட இரத்தத்தை மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள்.

அனைத்து இரத்தமும் ஒருவருக்கு வழங்கும்முன் முறையாக சோதனை செய்யவேண்டும். அப்படி செய்தால் இதுபோன்ற பாதிப்பை தடுக்கலாம்’’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தின் துணை வேந்தர் ஜாவேத் கூறும்போது, ‘‘இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் 6 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதுடன், எலும்பு மஜ்ஜை தானமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகள் மற்றும் சில இரத்தம் வழங்கும் அமைப்புகளால் இதுபோன்ற மரணங்கள் அதிகரிக்கின்றன.”

“அவர்கள் உடனே இதை நிறுத்த வேண்டும். இதுபோல் ஏராளனமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று நான் அஞ்சுகிறேன். எனவே, அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.