Home இந்தியா கிரிக்கெட்: உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

கிரிக்கெட்: உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

435
0
SHARE
Ad

indian teamமும்பை, டிசம்பர் 5 – உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 30 வீரர்கள் கொண்ட இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், 2011ல் உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர வீரர்களான சேவக், கம்பீர், யுவராஜ் சிங், ஜாகீர் கான் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

புதுமுக வீரர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தொடங்க உள்ளது.

இத்தொடருக்கான 30 வீரர்கள் கொண்ட இந்திய உத்தேச அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான 5 பேர் குழுவினர் அணியை தேர்வு செய்தனர்.

#TamilSchoolmychoice

இதில், கடந்த 2011-ல் உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த சேவக், கம்பீர், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகிய மூத்த வீரர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

2011 அணியில் இடம் பெற்றிருந்த கேப்டன் டோனி, கோஹ்லி, ரெய்னா, அஷ்வின் ஆகிய 4 வீரர்கள் மட்டுமே உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும், நெஹ்ரா, முனாப் பட்டேல், பியூஸ் சாவ்லா, யூசப் பதான் போன்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கவில்லை.

முழுக்க முழுக்க இளம் வீரர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் போட்டியில் சிறப்பாக செயலாற்றிய காஷ்மீரின் ஆல்ரவுண்டர் பர்வேஷ் ரசூல், உ.பி. சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், பேட்ஸ்மேன்கள் மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், குஜராத் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

indian-teamஇளம் விக்கெட் கீப்பர்களான சாஹா, சஞ்சு சாம்சனும் உத்தேச அணியில் இடம் பிடித்துள்ளார். அதே நேரத்தில், சமீபத்திய போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படாமல் உள்ள முரளி விஜய், அம்பாதி ராயுடு, ராபின் உத்தப்பா போன்றவர்களுக்கு உத்தேச அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து 15 வீரர்கள் கொண்ட இறுதி அணி ஜனவரி 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்திய உத்தேச அணியில், டோனி, ஷிகார் தவான், ரோகித் சர்மா, ரஹானே, உத்தப்பா, கோஹ்லி, ரெய்னா, ராயுடு, கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி,

மணிஷ் பாண்டே, சாஹா, சஞ்சு சாம்சன், அஷ்வின், ரசூல், கர்ண் சர்மா, அமித் மிஸ்ரா, ஜடேஜா, அக்ஷர் பட்டேல், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, உமேஷ் யாதவ், ஆருண், தாவல் குல்கர்னி, பின்னி, மோகித் சர்மா, டிண்டா, குல்தீப் யாதவ் மற்றும் முரளி விஜய் இடம் பிடித்துள்ளனர்.