Home இந்தியா காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 23 ராணுவ வீரர்கள் பலி ! மோடி கடும் கண்டனம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 23 ராணுவ வீரர்கள் பலி ! மோடி கடும் கண்டனம்

513
0
SHARE
Ad

indian armyஸ்ரீநகர், டிசம்பர் 6 – காஷ்மீர் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் அழைப்பு விடுத்த போதிலும், 2 கட்ட வாக்குப்பதிவில் இதுவரை இல்லாத அளவுக்கு 71 சதவீத வாக்குகள் பதிவாயின.

இந்த நிலையில், 3-வது கட்ட வாக்குப்பதிவு வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது. வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஊரி என்ற இடத்தில் வருகிற திங்கட்கிழமை நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேச இருக்கிறார்.

இந்த நிலையில், அங்குள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ஊரி பகுதியில் உள்ள மோக்ரா என்ற இடத்தில் அமைந்துள்ளது அந்த ராணுவ முகாம். நேற்று அதிகாலை 3.10 மணிக்கு ஆயுதங்களுடன் வந்த 6 தீவிரவாதிகள், அந்த முகாம் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

#TamilSchoolmychoice

அதிரடிப்படை வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது முதலில் ஒரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டான். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் மற்றொரு வாகனத்தில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் முகாமுக்குள் புகுந்து விட்ட தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபடி கையெறி குண்டுகளையும் வீசினார்கள்.

இந்த சம்பவத்தில், ஒரு ராணுவ அதிகாரி (லெப்டினன்ட் கர்னல்) உள்பட 22 ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள்.

பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து சமீபத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக கருதப்படுகிறது.

modi131தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது:- “காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மக்கள் பெருமளவில் பங்கு கொண்டு வாக்கு அளிப்பது அவர்களுடைய நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் காட்டுகிறது”.

“இதனால் ஏமாற்றம் அடைந்து இருக்கும் தீவிரவாதிகள், தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். காஷ்மீரில் உருவாகி இருக்கும் நல்ல சூழ்நிலையை சீர்குலைக்கும் அவர்களுடைய முயற்சி வெற்றி பெறாது”.

“வீரம் மிகுந்த நமது ராணுவ வீரர்கள் செய்த தியாகத்துக்கு 125 கோடி இந்தியர்களும் தலைவணங்குகிறார்கள். அவர்களுடைய தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம் என மோடி கூறியுள்ளார்.