Home இந்தியா அமிலம் விற்பனையைக் கட்டுப்படுத்த சட்டம்- ஜெயலலிதா

அமிலம் விற்பனையைக் கட்டுப்படுத்த சட்டம்- ஜெயலலிதா

614
0
SHARE
Ad

jeyaசென்னை, பிப்.27-தமிழகத்தில்  அமிலம்  (ஆசிட்)விற்பனையைக் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் வரும் வரவு செலவு கூட்டத் தொடரில் சட்ட மசோதா கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில்  அமில வீச்சு சம்பவங்களால் பெண்கள் தொடர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

புதுவையைச் சேர்ந்த பொறியாளரான வினோதினி (23), தன்னை காதலிக்க மறுத்ததாகக் கூறி சுரேஷ் என்ற இளைஞர் அவர் மீது  அமிலம் வீசினார்.

#TamilSchoolmychoice

இந்தச் சம்பவத்தால் பலத்த காயமடைந்த வினோதினி, மூன்று மாதங்களுக்கும் மேல் காயத்திலிருந்து மீண்டுவர போராட்டம் நடத்தினார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மூச்சுத் திணறலால் பிப்ரவரி 12-ம் தேதி உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்பு தமிழகம் முழுவதும்  அமில வீச்சு தொடர்பாக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

அந்த அதிர்வலை அடங்குவதற்குள்ளாகவே சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா (21) என்ற இளம்பெண் மீது அவரை திருமணம் செய்ய இருந்த விஜயபாஸ்கர் என்பவரே  அமிலம்  வீசினார்.

திருமணம் தள்ளிப் போனதால் கணினி மையத்தில் பணிபுரிந்து வந்த அந்த இளம்பெண் மீது விஜயபாஸ்கர்  அமிலம் வீசியுள்ளார். ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த வித்யாவும், நோய்த்தொற்று ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை (பிப்.24) உயிரிழந்தார்.

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் அமில வீச்சுக்குப் பலியான நிலையில், வித்யாவின் குடும்பத்துக்கு நிவாரணம் அளித்து முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

“காஞ்சிபுரம் மாவட்டம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மகள் வித்யா. அவர், விஜய்பாஸ்கர் என்பவரால் அமில தாக்குதலுக்குள்ளாகி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 24-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வித்யாவின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் வரும் வரவு செலவு கூட்டத் தொடரின்போது அமில விற்பனையைக் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்” என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அமில விற்பனையைக் கட்டுப்படுத்தவும், உரிய உரிமம் இன்றி  அமில வகைகளை விற்பனை செய்வோரை கடுமையாகக் தண்டிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.