Home உலகம் சீனாவின் அதிநவீன ரகசிய போர்க்கப்பல், கப்பற்படைக்கு அர்ப்பணிப்பு

சீனாவின் அதிநவீன ரகசிய போர்க்கப்பல், கப்பற்படைக்கு அர்ப்பணிப்பு

512
0
SHARE
Ad

sub-marineபெய்ஜிங், பிப். 27-  சீனா, கிழக்கு மற்றும் தென் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட கப்பற்படையை வலுப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு நடவடிக்கையாக நேற்று புதிய ரகசிய போர்க்கப்பல் ஒன்றை கப்பற்படைக்கு அறிமுகப்படுத்தியது.

நேர்த்தியான வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள 056 என்ற இந்த போர்க்கப்பல் ரேடார் கருவியால் எளிதல் அடையாளம் காணமுடியாது.

#TamilSchoolmychoice

இதனால் எதிரியின் கண்ணில் சிக்காமல், திருட்டுத்தனமாக தப்பித்து சென்று எதிரியை எளிதில் அழிக்கக் கூடியதாகும்.

நீர் முழ்கி கப்பலை தாக்கும் வல்லமை பெற்ற இந்த ரகசியக் கப்பல், பாதுகாப்பு பணியையும் மேற்கொள்ளும்.

இது போன்று 20 கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன என்று சீனா கூறியுள்ளது.இதனால், சீனாவின் எல்லைப்பகுதியில் உள்ள நாடுகளான ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான் போன்ற நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.