Home நாடு இன்றைய மஇகா-வின் சவால்கள் கருத்தரங்கம் – புகைப்படத்தொகுப்பு

இன்றைய மஇகா-வின் சவால்கள் கருத்தரங்கம் – புகைப்படத்தொகுப்பு

531
0
SHARE
Ad
MIC1
மேடையில் உரையாற்றும் எஸ்பி.மணிவாசகம் – மஇகா-வின் முக்கியத் தலைவர்களுடன் டத்தோ டி.மோகன், டத்தோ ச்ரவணன்

கோலாலம்பூர், டிசம்பர் 6 – முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் தலைமையிலான மஇகா-வின் எதிர்கால சவால்கள் பற்றிய கருத்தரங்கம், மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

MIC2

மஇகா மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சங்கங்களின் பதிவிலாகா நேற்று திடீர் அறிவிப்பு செய்ததை அடுத்து, முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த படி, இந்த கருத்தரங்கத்தில் காரசார விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

MIC
கருத்தரங்கில் திரளாகக் கலந்து கொண்டவர்கள்
#TamilSchoolmychoice

எனினும், தற்போதைய நிலவரப்படி, முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன், மஇகா தேசிய உதவித்தலைவர் டத்தோ சரவணன் ஆகியோர் முன்னிலையில், கோத்தா ராஜா மஇகா தொகுதியின் முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.மணியம், டத்தோ முருகையா, டத்தோ பெருமாள், கூலிம் பண்டார் பாரு தொகுதி தலைவர் ஆனந்தன்,மணிவாசகம், ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் அசோகன், டத்தோ நாதன், டத்தோ தேவேந்திரன், டத்தோ இராமச்சந்திரன், டத்தோ என்.முனியாண்டி, டத்தோ ஹென்றி, டத்தோ வி.எஸ்.மோகன், உஷா நந்தினி ஆகியோர் மேடையில் மஇகா-வின் இன்றைய நிலை, எதிர்கால சவால்கள் குறித்து உரையாற்றி வருகின்றனர்.

IMG_5341

செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்