Home நாடு கருக்கலைப்பு செய்த பெண்ணிற்கு சிறைத் தண்டனை – மலேசியாவில் புதிய வரலாறு

கருக்கலைப்பு செய்த பெண்ணிற்கு சிறைத் தண்டனை – மலேசியாவில் புதிய வரலாறு

492
0
SHARE
Ad

pregnancy-after-40புக்கிட் மெர்தாஜம், டிசம்பர் 6 – மலேசியாவில் கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு முதன் முறையாக புக்கிட் மெர்தாஜம் அமர்வு நீதிமன்றம் ஓர் ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நிமலா தாப்பா (24) என்ற அந்த பெண் கருக்கலைப்புக்கு மருந்தகம் ஒன்றிற்குச் சென்ற போது அவர் கைது செய்யப்பட்டார். சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தனியார் மருத்துவமனைப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது அப்பெண்ணைக் கைது செய்தனர்.

ஒரு பிள்ளை உயிருடன் பிறப்பதைத் தடுத்தார் என்பதற்காக, குற்றவியல் சட்டம் 315-ன் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். இந்த குற்றப்படி உயர்ந்தபட்சம் 10 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

#TamilSchoolmychoice

மலேசியா மறு உற்பத்தி உரிமை கூட்டணி இயக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சோங் சிம் போய் நிர்மலா தான் மலேசியாவில் கருக்கலைப்பிற்காக முதன்முதலில் சிறைக்கு அனுப்பப்பட்ட பெண் என்று கூறினார்.