Home இந்தியா இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை திருப்பதி வருகை!

இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை திருப்பதி வருகை!

536
0
SHARE
Ad

rajapaksaதிருமலை, டிசம்பர் 8 – இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி கோயிலில் வரும் 10-ம் தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். முன்னதாக அவர் நாளை திருப்பதிக்கு வருகிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் வந்து செல்லும் ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மலை பாதைகள்,  ஓய்வெடுக்கும் பத்மாவதி நகரில் உள்ள விருந்தினர் மாளிகை, திருப்பதி கோயில், வராக சுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை திருப்பதி துணை பாதுகாப்பு ஆணையர் சுவாமி ஆய்வு செய்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற இலங்கை அதிபர் திருப்பதிக்கு வந்தபோது மதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் திருப்பதியிலும், திருமலையிலும் ஆர்ப்பாட்டங்கள் செய்ய முயன்றனர்.

#TamilSchoolmychoice

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்த சம்பவங்கள் நடந்தன. இதுபோன்றவை நடைபெறாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.