Home உலகம் செப்டம்பர் மாத வெள்ளப் பேரழிவிற்கு காரணம் இந்தியா – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

செப்டம்பர் மாத வெள்ளப் பேரழிவிற்கு காரணம் இந்தியா – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

465
0
SHARE
Ad

Indiaஇஸ்லாமாபாத், டிசம்பர் 8 – பாகிஸ்தானின் செனாப், ஜீலம் ஆறுகளின் வெள்ளப் பெருக்கு குறித்து இந்தியா தவறான தகவலை அளித்தது.

அதனை நம்பி பாகிஸ்தான் செயல்பட்டதனால் தான் மிகப் பெரும் அழிவினை சந்திக்க நேர்ந்தது என்று அந்நாட்டு அரசின் அறிக்கையில் இந்தியாவின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு நேரிட்டது. அதே காலகட்டத்தில், பாகிஸ்தான் பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இது பாகிஸ்தானில் உள்ள 1,241 கிராமங்களை கடுமையாக பாதித்தது.

#TamilSchoolmychoice

சுமார் 21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் முழ்கின, 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த பேரழிவு குறித்து பாகிஸ்தான் அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள அறிக்கையை பாகிஸ்தானைச் சேர்ந்த ‘எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்’ (The express tribune) என்ற ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:- “இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி, வெள்ளக் காலங்களில் ரவி, சட்லஜ், பியாஸ், செனாப், ஜீலம் ஆகிய ஆறுகளில் வரும் வெள்ளப் பெருக்கின் அளவு குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா தகவல் தெரிவிக்க வேண்டும்”.

“கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான கால கட்டத்தில், நீரின் அளவு குறித்து இந்தியா தவறான தகவலை அளித்துவிட்டது.”

“சிந்து நதிக்கான பாகிஸ்தானின் ஆணையரிடம், ஆறுகளில் வரும் நீரின் அளவு குறித்து இந்தியா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தது.”

“எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நேரிடாமல் தடுப்பதற்கு இந்திய அதிகாரிகளிடம், பாகிஸ்தான் அரசு இவ்விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.