Home இந்தியா பாஜகவிலிருந்து விலகுகிறதா மதிமுக? – நாளை வைகோ முக்கிய ஆலோசனை!

பாஜகவிலிருந்து விலகுகிறதா மதிமுக? – நாளை வைகோ முக்கிய ஆலோசனை!

536
0
SHARE
Ad

vaiko9சென்னை, டிசம்பர் 8 – மதிமுகவின் உயர் மட்ட குழுக் கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ளது. இதில் பாஜக கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து பொதுச் செயலாளர் வைகோ முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கைத் தமிழர் விவகாரம், ராஜபக்சேவுடனான மத்திய அரசின் நெருக்கம், தமிழக மீனவர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசுக்கும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் கடும் மோதல் வெடித்துள்ளது.

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார் வைகோ. ஆனால் இதை அரசியல்ரீதியாக சந்திக்காமல், தனிப்பட்ட முறையில் வைகோ பாதுகாப்பாக நடமாட முடியாது, வீடு திரும்பமுடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துப் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

ராஜாவின் பேச்சுக்கு திமுக தலைவர் கருணாநிதி முதல் பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மறுபக்கம் சுப்பிரமணியசாமி மூலம் தமிழர்களைச் சீண்டிப் பார்த்து வருகிறது பாஜக மேலிடம்.

சாமியின் சர்ச்சைப் பேச்சுக்களை பாஜக இதுவரை பகிரங்கமாக கண்டிக்காமலும் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் நாளை சென்னையில் உள்ள மதிமுக தலைமைக் கழக அலுவலகமான, தாயகத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் உயர்மட்ட குழு கூட்டம், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில், கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவது குறித்தும் முடிவு எடுக்கப்படுகிறது.