Home அவசியம் படிக்க வேண்டியவை ஆல்வின் டானின் கடப்பிதழ் முடக்கப்பட்டது!

ஆல்வின் டானின் கடப்பிதழ் முடக்கப்பட்டது!

594
0
SHARE
Ad

alvin sex bloggerகோலாலம்பூர், டிசம்பர் 8 – சர்ச்சைக்குரிய ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டான் மற்றும் போராட்டவாதி அலி அப்துல் ஜாலில் ஆகிய இருவரது கடப்பிதழ்களும் இரத்து செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை இயக்குநர் முஸ்தபா இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரது கடப்பிதழ்களும் இரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் அவர்களது மலேசிய முகவரிக்கு நாளை அனுப்பப்படும் என்றும் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும், இஸ்லாமையும் அவமதித்த காரணத்திற்காக, அவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த நடவடிக்கை அனைவருக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றும் முஸ்தபா தெரிவித்துள்ளார்.