Home தொழில் நுட்பம் ‘சங்கம்’ செயலியில் மேலும் 7 இந்திய மொழிகள்!

‘சங்கம்’ செயலியில் மேலும் 7 இந்திய மொழிகள்!

797
0
SHARE
Ad

unnamedகோலாலம்பூர், டிசம்பர் 12 – ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்திய ஐஓஎஸ் 8 இயங்குதளத்தில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அவற்றில், மென்பொருள் மேம்பாட்டாளர்கள் அவரவரின் சொந்த விசைமுகங்களை (Keyboards) சேர்ப்பதற்காக வழங்கப்பட்ட புதிய வாய்ப்பு, முக்கியமான ஒன்றாகும்.

இதன் மூலம் ஐஓஎஸ் மேம்பாட்டாளர்கள் ஏற்கனவே தாங்கள் மற்ற இயங்கு தளங்களுக்காக உருவாக்கி இருந்த பற்பல விசைமுகங்களை புதிய ஐஓஎஸ் 8 தளங்களில் இணைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. மேம்பாட்டாளர்களிடையே மிகுந்த வரவேற்பையும் இந்த மாற்றம் பெற்றது.

unnamed (1)

#TamilSchoolmychoice

ஏற்கனவே, இதுபோன்ற  வசதிகள் அண்ட்ரோய்டு தளங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டுதான் ஐஓஎஸ் தளங்களில் இந்த வசதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.

ஐஓஎஸ் 8 வெளியிடப்பட்ட அதே நாளில்,  ‘சங்கம்எனும் இந்திய மொழிகளை உள்ளிடும் விசைமுகங்களுக்கானச் செயலியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

unnamed (2)

சங்கம்’, மலேசிய தொழில் நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறனால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட செயலியாகும்.முத்து நெடுமாறன் செல்லியல், செல்லினம், ஆகிய தளங்களின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரும், ஆலோசகரும் ஆவார்

‘சங்கம்’ செயலியின் முதற் பதிப்பில் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளை உள்ளிடும் வசதி சேர்க்கப்பட்டிருந்தது.

மேலும் 7 இந்திய மொழிகள் இணைப்பு 

unnamed (3)

இன்று முதல்சங்கம் 1.2’ செயலியில் புதிதாக மேலும் 7 இந்திய மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இப்போதுதான் முதன் முறையாக இந்த செயலியில் மேம்பாட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

வங்காளம், குஜராத்தி, இந்தி, மராத்தி, நேப்பாளி, ஒரியா மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளின் விசைமுகங்கள் தற்போது சங்கம் செயலியில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த எல்லா உள்ளீடுகளிலும் தானியங்கி திருத்தங்களுக்கான வசதிகளும், அடுத்து வரும் சொல்லை செயலியே பரிந்துரை செய்யும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளன.

சங்கம்’ செயலியை, இலவசமாக, கீழ்க்காணும் இணைப்பில் இருந்து ஐஒஎஸ் 8 இயங்கும் கருவிகளில் பயனர்கள் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.

(https://itunes.apple.com/us/app/sangam-keyboards/id910182628?ls=1&mt=8)