Home கலை உலகம் ரஜினியின் ‘லிங்கா’ படத்திற்காக நாட்களை எண்ணும் தனுஷ்!

ரஜினியின் ‘லிங்கா’ படத்திற்காக நாட்களை எண்ணும் தனுஷ்!

531
0
SHARE
Ad

lingaa_3சென்னை, டிசம்பர் 9 – கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா, சந்தானம், கருணாகரன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள படம் ‘லிங்கா’.  படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்காக ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும் காத்திருக்கின்றனர்.  இந்நிலையில் தனுஷுக்கு இப்படம் இரட்டை மகிழ்ச்சி என்றே சொல்லலாம்.

ரஜினி தனுஷுக்கு மருமகன். அதே போல் படத்தின் தலைப்பு தனுஷ் மகனின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’லிங்காவிற்கு இன்னும் 4 நாட்கள்தான் உள்ளது , 3 நாட்கள் தான் உள்ளது, என எண்ணிக்கொண்டிருக்கிறார் தனுஷ்.