கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் அப்பாட் வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்டபோது பிலிப் ஹியூக்ஸ் தலையில் அடிபட்டதில் அவர் அகால மரணமடைந்தார்.
இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் சோகத்தில் மூழ்கியது. பிலிப் ஹியூக்ஸ் நினைவு திரும்பாமலேயே தனது 25ஆவது வயதில் காலமானதில், சீன் அப்பாட் மனமுடைந்து போனார்.
எனினும் இந்த மன உளைச்சலில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார். 22 வயதான அப்பாட் மீது எந்தத் தவறும் இல்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் ரசிகர்களிடம் இருந்தும் அவருக்கு ஆதரவு பெருகியது.
இதையடுத்து மீண்டும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றக் தொடங்கியுள்ளார் அப்பாட்.
நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியின்போது 13ஆவது ஓவரில் அவர் பந்து வீச அழைக்கப்பட்டார். முதல் 4 பந்துகளை மிதமான வேகத்திலும் உயரத்திலும் வீசியவர், ஐந்தாவது பந்தை பவுன்சராக அனுப்பினார்.
எந்த திடலில் அப்பாட் பந்து வீச்சில் அடிபட்டு பிலிப் ஹியூக்ஸ் வீழ்ந்தாரோ, அதே திடலில் நடைபெற்ற போட்டியில்தான் மீண்டும் களமறிங்கினார் அப்பாட் என்பது குறிப்பிடத்தக்கது.