Home வணிகம்/தொழில் நுட்பம் நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் : 1,800 விமான சேவைகள் ரத்து!

நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் : 1,800 விமான சேவைகள் ரத்து!

532
0
SHARE
Ad

spicejetபுதுடெல்லி, டிசம்பர் 10 – விமான சேவையை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், சுமார் 1,800 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

சன் குழுமத்துக்கு உரிமையான ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் காத்மாண்டுவில் இருந்து நேபாளம் செல்லும் சேவை மற்றும் உள்ளூர் விமான சேவைகள் என டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான 1,861 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

மேலும், விமான சேவைக்கான முன் பதிவையும் ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice