Home நாடு ஆங்கில மொழியை கிரகிக்க தடுமாறும் மலேசிய மாணவர்கள் – முகைதீன்  ஆதங்கம்

ஆங்கில மொழியை கிரகிக்க தடுமாறும் மலேசிய மாணவர்கள் – முகைதீன்  ஆதங்கம்

578
0
SHARE
Ad

Tan-Sri-Muhyiddin-Yassin3கோலாலம்பூர், டிசம்பர் 10 – ஆங்கில மொழியைக் கிரகித்துக் கொள்வதில் மலேசிய மாணவர்கள் தடுமாறுவதாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன்  யாசின் தெரிவித்துள்ளார்.

இருபது ஆண்டுகள் தொடர்ந்து அம்மொழியை கற்ற பிறகும், ஆங்கிலத்தில் சரளமாக உரையாட தடுமாறுகிறார்கள் எனில், நமது கல்வி அமைப்பில் ஏதோ கோளாறு இருக்க வேண்டுமென தாம் கருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி ஒரு பிரச்சினையாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், பட்டதாரிகளும் கூட ஆங்கில மொழியில் தடுமாறுவது தமக்குப் புதிராக உள்ளது என்றார்.

#TamilSchoolmychoice

“தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பின்னரும் கூட நமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் உரையாட முடியாமல் உள்ளது வருத்தமளிக்கிறது. பாலர் பள்ளியிலேயே ஆங்கிலம் கற்கத் தொடங்கும் நமது மாணவர்கள் பின்னர் மேல்நிலைப் பள்ளி வரை தொடர்ந்து அம்மொழியைக் கற்கிறார்கள். பின்னர் பல்கலைக்கழங்களிலும் நான்கைந்து ஆண்டுகள் படிக்கும்போது, அவர்களுக்கு பிரச்சினை வரக்கூடாது.”

“மேல்படிப்புக்கான கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் ஆங்கில மொழியின் மீதான தங்களது ஆளுமையை மேலும் பட்டை தீட்டிக் கொள்ள வேண்டும், மொழித்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.”

“18 முதல் 19 ஆண்டுகள் வரை ஒருமொழியைக் கற்பதற்காக செலவிடப்பட்ட நேரத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது அது குறைவாக இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது,” என்றார் முகைதீன்.

இப்பிரச்சினைக்கான ஆணிவேர் காரணம் என்னவென்பதை குறிப்பிடாத அவர், மலாய் மொழியிலேயே இதர பாடங்களைப் படிப்பதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்றார்.

“எனினும் தேசிய மொழி காரணமாக இந்நாட்டில் ஆங்கிலத்தின் தரம் பாதிக்கப்படுவதாக நான் கருதவில்லை,” என்றார் முகைதீன்.