Home 13வது பொதுத் தேர்தல் பிகேஆர், பிஎஸ்எம் மோதல் – சுங்கை சிப்புட் தொகுதி ம.இ.காவுக்கு சாதகமாகுமா?

பிகேஆர், பிஎஸ்எம் மோதல் – சுங்கை சிப்புட் தொகுதி ம.இ.காவுக்கு சாதகமாகுமா?

979
0
SHARE
Ad

Michael Jeyakumarடிசம்பர் 19 – ம.இ.கா போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் எல்லா தொகுதிகளிலும் யார் வேட்பாளர் என்பது தெரியாத காரணத்தால் அந்த தொகுதிகளில் எல்லாம் அமைதி நிலவி வரும் வேளையில், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் அரசியல் புயல் வீசத் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவரும் சுங்கை சிப்புட் தொகுதியின் முன்னளாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ச.சாமிவேலு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியின் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பரபரப்பு பற்றிக் கொண்ட சுங்கை சிப்புட் தொகுதியில் தற்போது மற்றொரு பிரச்சனை முளைத்துள்ளது. நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தான் சார்ந்துள்ள பிஎஸ்எம் எனப்படும் பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா கட்சியின் சொந்த சின்னத்தில் போட்டியிட முடிவெடு செய்திருப்பதாக பத்திரிக்கை தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

அவ்வாறு போட்டியிட்டால், அது தேசிய முன்னணிக்கே சாதகமாக முடியும் என்றும், காரணம் ஒரு புதிய கட்சியின் சின்னமாக பிஎஸ்எம் கருதப்படும் வேளையில், பிரபலமாகாத அந்த சின்னத்திற்கு வாக்களிக்க வாக்காளர்கள் முன்வருவார்களா என்பது கேள்விக் குறிதான். கடந்த முறை டாக்டர் ஜெயகுமார் பிகேஆர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு சுங்கை சிப்புட் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணி சுங்கை சிப்புட் தொகுதியை பிஎஸ்எம் கட்சிக்கு விட்டுக் கொடுக்குமா அல்லது முன்பு போலவே பிகேஆர் கட்சியே இங்கு போட்டியிடுமா என்பதைப் பொறுத்துதான் தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்புகள் அமையும்.

இந்த குழப்பங்களினால் ம.இ.கா வே மீண்டும் இந்த தொகுதியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.