Home தொழில் நுட்பம் ‘கேலக்சி இ’ ரக திறன்பேசிகளை உருவாக்கி வரும் சாம்சுங்!

‘கேலக்சி இ’ ரக திறன்பேசிகளை உருவாக்கி வரும் சாம்சுங்!

569
0
SHARE
Ad

samsung-logo-500x252கோலாலம்பூர், டிசம்பர் 21 – தென்கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங், விரைவில் ‘கேலக்சி இ’ (Galaxy E) ரக திறன்பேசிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாம்சுங் நிறுவனம் வெளியிட்ட ‘கேலக்சி எ’ (Galaxy A) திறன்பேசிகள் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற நிலையில், அடுத்த ஆண்டு முதல் கேலக்சி இ ரக திறன்பேசிகளை அந்நிறுவனம் உருவாக்க இருப்பதாகவும், அதன் முதற்கட்டமாக அடுத்த சில மாதங்களில் சாம்சுங்,  ‘கேலக்சி இ7’ (Galaxy E7) மற்றும்  ‘கேலக்சி இ5’ (Galaxy E5) திறன்பேசிகளை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சாம்சுங் வட்டாரங்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கேலக்சி இ7 திறன்பேசிகளில் 1.2GHz குவால்கம் ஸ்னேப்டிராகன் 410 உணர்த்திகளும் (சென்சர்), 2ஜிபி அளவிற்கான முதன்மை நினைவகமும், 13 எம்பி கேமரா மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

கேலக்சி இ7 திறன்பேசிகளை ஒப்பிடுகையில் கேலக்சி இ5 திறன்பேசிகள் குறைந்த தொழில்நுட்ப அம்சங்கள் கொண்டதாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டு திறன்பேசிகளும், அண்டிரொய்டின் நவீன இயங்குதளமான ‘லாலிபாப்’ (Lollipop)-ல் இயங்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.