Home உலகம் உலக பொருளாதார வளர்ச்சி கருதி எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க வளைகுடா நாடுகள் முடிவு!

உலக பொருளாதார வளர்ச்சி கருதி எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க வளைகுடா நாடுகள் முடிவு!

462
0
SHARE
Ad

நியூயார்க், டிசம்பர் 21 – உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் தொடர் சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், வளைகுடா நாடுகள் எண்ணெய் கண்டறியும் பணியிலும், ஏற்கனவே கண்டறியப்பட்ட எண்ணெய் வளங்களில் உற்பத்திக் கிணறுகளை அமைக்கும் பணியிலும் தொடர்ந்து அதிக முதலீடுகளை ஏற்படுத்த வேணடும் என்று எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Petroleum Oil in barrels

இதன் மூலம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கடும் பொருளாதார பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

#TamilSchoolmychoice

சமீபத்தில் நடைபெற்ற அனைத்துலக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பின் கூட்டம் ஒன்றில் அந்த அமைப்பின் தலைவர் அப்துல்லா அல் பதிரின் இது குறித்து வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.

இது  தொடர்பாக அவர் அண்மையில் கூறியதாவது:-

“அனைத்துலக சந்தையின் தேவையையும் தாண்டி கூடுதலான அளவிற்கு கச்சா எண்ணெயின் விலை குறைந்து விட்டது. எண்ணெய் கண்டறியும் பணியிலும், ஏற்கனவே கண்டறியப்பட்ட எண்ணெய் வளங்களில் உற்பத்திக் கிணறுகளை அமைக்கும் பணியிலும் தொடர்ந்து அதிக முதலீடுகளை ஏற்படுத்த வேணடும். இதன் மூலம் வருங்காலத்தில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தியின் அளவை குறைக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்கு ஈரான் உட்பட சில நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தியை குறைப்பதன் மூலம், மீண்டும் விலை ஏற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று ஈரான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.