Home நாடு வங்கிக் கடன் பெற்று ஐஎஸ்ஐஎஸ்-ல் இணைந்துள்ளனர் –  சிறப்பு புலனாய்வு அமைப்பு அதிர்ச்சித் தகவல்!   

வங்கிக் கடன் பெற்று ஐஎஸ்ஐஎஸ்-ல் இணைந்துள்ளனர் –  சிறப்பு புலனாய்வு அமைப்பு அதிர்ச்சித் தகவல்!   

495
0
SHARE
Ad

PDRMகோலாலம்பூர், டிசம்பர் 21  – உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்கு மலேசியர்கள் சிலர் வங்கிக் கடன் பெற்றுள்ளதாக வெளியான தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைவதற்கு திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ்-ன் ஆதரவாளர்கள் ஐந்து பேர் காவல் துறையினரால் சமீபத்தில் கோலாலம்பூர் விமான நிலையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ஈராக், சிரியா செல்வதற்கு வங்கிக் கடன் பெற்ற விவகாரம் தெரியவந்துள்ளது. இதனை காவல் துறை சிறப்பு புலனாய்வு அமைப்பின் துணை இயக்குநர் அயூப் கான் மைதீன் பிட்சே தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தங்களது அனைத்து சொத்துகளையும் விற்று ஈராக் மற்றும் சிரியா செல்ல திட்டமிட்டிருந்தனர். மேலும் பணத்திற்காக, அவர்கள் வங்கிக் கடன் பெறவும் விண்ணப்பித்திருந்தது அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதேபோன்றுஏற்கெனவே சிலர் வங்கிக் கடன் பெற்று ஈராக், சிரியா சென்றுள்ளது, இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் விரைவில் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து வங்கிகளும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கடன் பெற விண்ணப்பம் செய்பவர்கள் குறித்து, தீவிர விசாரணை நடத்திய பிறகே கடன் அளிக்க வேண்டும் எனவும் சிறப்புப் புலனாய்வு அமைப்பின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.