Home கலை உலகம் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மான்! மீண்டும் வெல்வாரா?

ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மான்! மீண்டும் வெல்வாரா?

769
0
SHARE
Ad

A-R-Rahmanமும்பை, டிசம்பர்  13 – 87ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் பங்கேற்க ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பிற்கான பிரிவில் ரஹ்மான் இசையமைத்த ‘கோச்சடையான்’ படம் இடம்பெற்றுள்ளது.

‘மோஷன் கேப்சர்’ தொழில் நுட்பத்தில் தயாரான இப்படத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ளனர்.

சிறந்த இசையமைப்பிற்கான பிரிவில் மொத்தம் 114 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி 20ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதளிப்பு விழா நடைபெற உள்ளது.

#TamilSchoolmychoice

‘கோச்சடையான்’ தவிர்த்து ‘தி 100 ஃபூட் ஜெர்னி’ மற்றும் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ உள்ளிட்ட படங்களுக்காகவும் சிறந்த இசையமைப்பிற்கான பிரிவில் ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

‘கோச்சடையான்’ படத்திற்காக ரஹ்மானுக்குப் பரிசு கிடைத்தால், தமிழுக்குக் கிடைக்கும் முதல் ஆஸ்கர் விருதாக அது அமையும்.