Home நாடு கே.எல்.ஐ.ஏ.2: விமான ஓடுதள பாதை சீரமைப்புப் பணி 2016ல் முடிவடையும்

கே.எல்.ஐ.ஏ.2: விமான ஓடுதள பாதை சீரமைப்புப் பணி 2016ல் முடிவடையும்

576
0
SHARE
Ad

klia2airport160414சிப்பாங், டிசம்பர் 13 – கே.எல்.ஐ.ஏ.2 அனைத்துலக விமான நிலையத்தில் விமானங்கள் செல்ல பயன்படும் ஓடுதள பாதைகளின் சீரமைப்புப் பணிகள் வரும் 2016ஆம் ஆண்டின் முதல் காலிறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இப்பணியில் சுமார் 25 விழுக்காடு முடிவடைந்திருப்பதாக மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டத்தோ பத்லிஷாம் கசாலி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“20 முதல் 25 விழுக்காடு பணிகள் முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன். மேலும் 75 விழுக்காடு பணிகள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த விழுக்காடு அளவு வெகுவாகக் குறையும் என உறுதியாக நம்புகிறேன். சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று பராமரிப்புக் குழுக்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றன. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம்,” என்றார் பத்லிஷாம் கசாலி.

#TamilSchoolmychoice

கே.எல்.ஐ.ஏ.2 விமான நிலையத்தின் ஓடுதள பாதைகளில் ஆங்காங்கே குட்டை போல் நிறைய தண்ணீர் தேங்கி நிற்பதாக கடந்த அக்டோபரில் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்தே சீரமைப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.