Home கலை உலகம் ஷாருக் – காஜோல் கொண்டாட்டம் – 1000 வாரமாக ஓடும் இந்திப் படம் “தில்வாலே துல்ஹனியா...

ஷாருக் – காஜோல் கொண்டாட்டம் – 1000 வாரமாக ஓடும் இந்திப் படம் “தில்வாலே துல்ஹனியா லே ஜாயெங்கே”

793
0
SHARE
Ad

Dilwale-Dulhania-Le-Jayengeமும்பாய், டிசம்பர் 13 – இந்தித் திரைப்பட உலகம் எத்தனையோ மறக்க முடியாத சாதனைப் படங்களை கண்டுள்ளது. ஆனால் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயெங்கே’ என்ற இந்தித் திரைப்படம் இதுவரை எந்த திரைப்படமும் புரியாத சாதனையைப் புரிந்துள்ளது.

ஷாருக்கான், கஜோல் நடிப்பில் ஆதித்ய சோப்ரா இயக்கிய தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே திரைப்படம் நேற்றுடன் ஆயிரம் வாரங்களை கடந்துள்ளது. இதுவொரு உலக சாதனை.

1995 -இல் வெளியான இப்படம் மும்பை மராத்தா மந்திர் திரையரங்கில் நான்கு காட்சிகளாக சில வருடங்களும் அதன் பிறகு காலைக் காட்சியாக இன்றளவும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் இவ்வளவு அதிக நாட்கள் ஒரே திரையரங்கில் ஓடுவது வரலாற்று சாதனையாகும்.

#TamilSchoolmychoice

தொலைக்காட்சி மற்றும் வேறு பொழுதுபோக்குகள் காரணமாக இந்தப் படத்தைப் பார்க்க இப்போதெல்லாம் ரசிகர்கள் அதிகம் வருவதில்லை. அதனால் படத்தை தூக்க இருப்பதாகவும், அதுகுறித்து படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ராவிடம் பேசவிருப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர் சில மாதங்கள் முன்பு கூறியிருந்தார். பிறகு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

நேற்று இந்தப் படம் ஆயிரமாவது வாரத்தை பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

இன்று படத்தின் கதாநாயகன் ஷாருக்கானும் கதாநாயகி காஜோலும் படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடினர். தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருவரும் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் தில்வாலே படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கும் மராத்தா மந்திர் திரையரங்குக்கு ஷாருக்கான் வருகை புரிந்தார்.